உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குல தெய்வ வழிபாடு அவசியம் மதுரையில் திருச்சி கல்யாணராமன் பேச்சு

குல தெய்வ வழிபாடு அவசியம் மதுரையில் திருச்சி கல்யாணராமன் பேச்சு

மதுரை:மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரத சொற்பொழிவு நடக்கிறது.

பார்த்தனும் பசுபதியும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: உலகில் கடவுள் இல்லை என கூறக் கூடாது. இது அவர்களால் உணர முடியவில்லை என்பதை குறிக்கும். இல்லாததற்கு இருப்பு கிடையாது; இருப்புக்கு இல்லாதது கிடையாது, என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார்.

குல தெய்வ வழிபாடு அவசியம்.ள்ளிகளில் பக்தியை கற்றுக் கொடுக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருந்தால் எதையும் உலகில் சாதிக்கலாம். பகவான் நாமம் ஒன்று தான் நம்மை காப்பாற்றும். உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம், என்றார் திருமூலர்.

ஒவ்வொருவரும் ராமாயணம், மகாபாரதம், பிரபந்தம் படிக்க வேண்டும். நல்லவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். துன்மார்க்கத்திற்கு போனதால் கவுரவர்கள் அழிந்தார்கள். நம்மை பாதுகாத்து கொள்ள நன்மார்க்க சிந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். இச்சொற்பொழிவு பிப்., 24 வரை தினமும் மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !