சோமவாரப்பட்டி பெருமாள் கோவிலில் கருட கம்ப ஸ்தாபித விழா
ADDED :2429 days ago
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், கருட கம்ப ஸ்தாபித விழா நாளை பிப்., 10ல் நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று பிப்., 9ல் , காலை, 10:30 மணிக்கு திவ்ய பிரபந்தமான திருவாய்மொழி சேவை நடக்கிறது. தொடர்ந்து, நாளை பிப்., 10ல், அதிகாலையில், திருவாராதனம் மற்றும் காலை, 8:30 மணிக்கு கருட கம்பம் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடக்கிறது.