உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் கோயில் தெப்ப உற்ஸவ கொடியேற்றம்

திருக்கோஷ்டியூர் கோயில் தெப்ப உற்ஸவ கொடியேற்றம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன் நேற்று (பிப்., 10ல்) துவங்கியது. தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடக்கும். நேற்றுமுன்தினம் (பிப்., 9ல்) மாலை கொடியேற்ற பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்று(பிப்., 10ல்) காலை 7:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் நின்ற கோலத்தில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சக்கரத்தாழ்வார் திருவீதி உலா வந்தார். காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் காப்புக்கட்டும் உற்ஸவம் நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் வீதி வலம் வந்தார்.விழா நாட்களில் தினமும் காலை, இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கும். பிப்., 15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிஷேகம், பிப்.,18ல் வெண்ணெய்த்தாழி சேவை, பிப்.,19 ல் பகல் 11:00 மணி, இரவு 10:00 மணிக்கு தெப்பம் நடக்கும். 11 வது நாள் காலையில் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். சிவகங்கை தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !