புதுச்சேரி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை: திரளான மாணவர்கள் பங்கேற்பு
ADDED :2474 days ago
புதுச்சேரி: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி, முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்னை நடந்தது.மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கவும், நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டியும் முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நேற்று (பிப்., 10ல்)நடந்தது.
காலை 9:00 மணி முதல் பகல் 1:30 மணி வரையிலும், மாலையில் 6:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 வரையிலும் லட்சார்ச்னை நடந்தது. இதில் திரளான மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு, சகஸ்கரநாம அர்ச்சனை புத்தகம், ஹயக்ரீவ புத்தகம், ரக்ஷை, பேனா, தேன் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது,பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி மாருதி டிரஸ்டியினர் செய்திருந்தனர்.