ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள குழந்தை ஏசு ஆலய தேர்பவனி விழா
ADDED :2503 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள குழந்தை ஏசு ஆலய 11ம் ஆண்டு தேர் பவனி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் சாலையில் உள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் கடந்த 7ந் தேதி மாலைபாளையங்கோட்டை பங்குத்தந்தை பிரான்சிஸ் கொடியேற்றி வைத்து சிறப்பு திருப்பலியை நடத்தினார்.
காட்டுமன்னார்கோவில் பங்குத்தந்தை ஜெயராஜ் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியை நடத்தினார்.பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக குழந்தை ஏசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது.ஏற்பாடுகளை ஸ்ரீபுத்தூர் பங்குத்தந்தை இருதயசாமி மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.