உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் ஆனந்தவல்லி கோவிலில் வருஷாபிஷேகம்

நத்தம் ஆனந்தவல்லி கோவிலில் வருஷாபிஷேகம்

பொன்னேரி:நத்தம் ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், வருஷாபிஷேக விழாவில், அம்மனுக்கு அன்னப்பாவாடை பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது.பொன்னேரி அடுத்த, பஞ்செட்டி அருகே, நத்தம் கிராமத்தில் உள்ள காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி சமேத
வாலீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (பிப்., 9ல்), 7ம் ஆண்டு வருஷாபிஷேக அன்னப்படையல் பெருவிழா, வெகு விமரிசையாக நடந்தது.

காலை, 11:00 மணிக்கு, கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஸ்தபன கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.மாலை, 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரம், பால், உணவு உள்ளிட்ட அன்னங்கள், பட்சணங்கள், பழவகைகள் படைத்து, நெய்குளத்தில் நடுவே அம்மன் எழுந்தருளும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
வருஷாபிஷேக விழாவில், நத்தம், பஞ்செட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஈஸ்வரவ பெருமானையும், ஆனந்தவல்லி மற்றும் பரிவார மூர்த்திகளையும் வணங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !