திருக்கழுக்குன்றம் ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2435 days ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தீர்த்தகரை ஈஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்), கோலாகலமாக நடந்தது.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், சங்கு
தீர்த்த குளத்தின் மேற்கில் அமைந்துள்ள, துணை கோவிலாக, பிரபராம்பிகை சமேத தீர்த்தகரை ஈஸ்வரர் கோவில் உள்ளது.உபயதாரர்கள் மற்றும் அறநிலையத் துறையினர் மூலம் இக்கோவிலை சீரமைத்து, நேற்று (பிப்., 10ல்), காலை, 9:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, 8ம் தேதி, கணபதி ஹோமம் நவக்கிரக பூஜை, கோபூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.