காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2490 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஹயகிரீவர் கோவிலில், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு லட்சார்ச்சனை, நேற்று பிப். 10ல்) நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் உள்ள ஹயகிரீவர் கோவிலில்,
ஆண்டுதோறும், பிப்., மாதம் பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் வெற்றி பெற சிறப்பு லட்சார்ச்சனை நடப்பது வழக்கம். இந்நிகழ்ச்சி நேற்று பிப். 10ல்) நடைபெற்றது.நேற்றுபிப். 10ல்) காலை, மாலை இரு வேளைகளில், லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ -
மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று, ஹயக்கிரீவரை தரிசனம் செய்தனர். மாணவர்களுக்கு பேனா, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.