சில்வார்பட்டி கோட்டைக்கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :2430 days ago
தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் மாலையா, அன்னபூரணத்தாய், ஒண்டிவீரையா, கோட்டைக்கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல்நாள் அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, மஹாசங்கல்பம், கணபதி லட்சுமிநவக்கிரஹ ஹோமம், தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கால யாகவேள்வி , திருமுறைபாராயணம், தீபாராதனை நடந்தது.மூன்றாம் நாள் யாத்ரா தானம், கடம்புறப்பாடு,
கும்பாபிஷேம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேகத்தை விஸ்வநாத சிவாச்சாரியார்,திருநாவுக்கரசு குருக்கள் செய்தனர். ஏற்பாடுகளை தலைவர் ராமசுப்பிரமணி, திருப்பணிக்குழு ராஜமாணிக்கம், காமையா, பாலு,
வீரமணிபொருளாளர் எஸ்.முத்துக்காமாட்சி செய்தனர். அன்னதானம், நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது.