கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் தேரைச்சுற்றி குவிகிறது குப்பை
கம்பம்:கம்பம் காந்தி சிலை அருகில் நிறுத்தப்பட்டுள்ள கம்பராயப்பெருமாள் கோயில் தேரைச் சுற்றி ஓட்டல் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். சுத்தமாக வைக்க
அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான தேர் காந்தி சிலை அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. தேரடியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.ஆனால் தேரை சுற்றி தற்போது குப்பை கொட்டத் துவங்கியுள்ளனர். குறிப்பாக ஓட்டல் கழிவுகள், எரிக்கப்பட்ட விறகு சாம்பல் போன்றவை கொட்டப்படுகின்றன. இதனால் அந்த இடம் அசுத்தமாக மாறி வருகிறது.
பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அறநிலையத் துறையினர், குப்பை கொட்டுவோர் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் தேரைச் சுற்றி குப்பை கொட்டிஅசுத்தப்படுத்தி வருகின்றனர்.