ஒட்டன்சத்திரம் ஸ்ரீ வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ஒட்டன்சத்திரம்:நவாமரத்துப்பட்டி, விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், ஸ்ரீ வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கசாமி, துணைத்தலைவர் அருண்கீர்த்தி, செயலாளர் கலைவாணி மற்றும் டிரஸ்டி மகிபாலா முன்னிலையில் ரெட்டியார்சத்திரம் மோகன் குருக்கள் கும்பாபிஷேக விழாவினை நடத்திவைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* வடமதுரை: வேல்வார்கோட்டை ஊராட்சி சேர்வைகாரன்பட்டியில் ஜக்கம்மாள், பொம்மையபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்றுமுன்தினம் (பிப்., 10ல்) மாலை வெள்ளபொம்மன்பட்டி அம்மன் கோயில்களில் இருந்து தீர்த்தக்குடங்கள் அழைப்புடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று (பிப்., 11ல்) காலை குடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகம்பளத்தார் குல வழக்கப்படி புதுகொம்பேரிபட்டி கொடிநாயக்கர், தர்மலிங்காபுரம் கணஷேன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சலகருது சுத்துபரவு ஓட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் குப்பாச்சி, முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யப்பன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.