ஒன்னுக்குள்ளே ஒன்பது
ADDED :2442 days ago
கடவுளும் (பரமாத்மா), உயிர்களும் (ஜீவாத்மா) ஒன்றே என்கிறார்ஆதிசங்கரர். இதை ‘அத்வைதம்’ என்பர். ஆனால், அவரே, இதற்கு நேர் எதிராக ‘ஒன்றுக்கு ஒன்பதாக’ பல தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தார். ‘பஞ்சாயதன பூஜை’ என்னும் பெயரில் கணபதி, சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களை வழிபடும் முறை அவர் உருவாக்கியதே. அதோடு, முருகன், ராமர், கிருஷ்ணர், கங்கை உள்ளிட்ட தெய்வங்களின் மீது ஸ்தோத்திரப் பாடல்களையும் இயற்றினார். இதற்குக் காரணம், உருவமற்ற இறைவன் மீது, மனம் எளிதாக ஒருமுகப்படாது என்பதால் தான்.