நடுவீரப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2429 days ago
நடுவீரப்பட்டு:பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பு அமிர்தமுத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (பிப்., 10ல்) மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பண்ருட்டி சாத்திப்பட்டு அருகில் உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள அமிர்த முத்து மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. 9ம் தேதி சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் (10ம் தேதி) காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் கோவில் உலாவாக வந்து 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.