உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பழங்கால கோவில்கள் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

உடுமலை பழங்கால கோவில்கள் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

உடுமலை:பழங்கால கோவில்கள் பராமரிப்புக்கு, இந்து அறநிலையத்துறையினர் முக்கியத் துவம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை,
குடிமங்கலம் பகுதியில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. இக்கோவில்களுக்கு, மன்னர்கள், பாளையக்காரர்கள் தானமாக அளித்த நிலங்கள், இந்து அறநிலையத்துறையால்
ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.

இதனால், அத்துறைக்கு, நிரந்தர வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும், இக்கோவில்கள், முறையான பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்களை உள்ளடக்கிய கோவில்களின் நிலையால், அப்பகுதி மக்கள் வேதனைக்குள்ளாகின்றனர்.

சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன், கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன், பெரியபட்டி ரங்கநாத பெருமாள் உட்பட உடுமலை தாலுகாவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 30க்கும் மேற்பட்ட கோவில்கள், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.

இதில், சில கோவில்களை புதுப்பிக்க, தொல்லியல்துறையின், தொழில்நுட்ப பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அடிப்படையில், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு இதுவரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.பல கோவில்களில் மழைக்காலங்களில், உள்ளே தார்ப்பாய் கட்டி, தண்ணீரை தடுக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பழங்கால கோவில்களை பராமரிக்க, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும்
என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !