போத்தனூர் அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2429 days ago
போத்தனூர்:போத்தனூர், கடைவீதியிலுள்ள அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா பேச்சியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்கியது. இரு நாட்களாக திருவிளக்கு வழிபாடு, அடியார்கள் வழிபாடு, விமானக் கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம் (பிப்., 10ல்) காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருச்சுற்று மூர்த்திகள் துணை சன்னிநிதிகளுக்கும், ராஜகோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.