நாகமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2540 days ago
சூலூர்: நாகமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலூர் அடுத்த நாகமநாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன்,
மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 9ம் தேதி காலை, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
மாலை, புனித நீர் கலசங்கள் யாக சாலையில் நிறுவப்பட்டன. தொடர்ந்து முதல் கால யாகம் நடந்தது. நேற்று முன்தினம் (பிப்., 10ல்) காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகம், பூர்ணஹூதி நடந்தது.புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 9:00 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது.