சென்னை கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை:செம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 11ல்) விமரிசையாக நடந்தது.செம்பாக்கம், தாம்பரம்-வேளச்சேரி சாலை அடுத்த,
மாரியம்மன் கோவில் தெருவில், தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சமீபத்தில் நடந்த திருப்பணியில், நூதன ஆலயம் அமைத்து, பரிவார மூர்த்திகளும் நிர்மானம்
செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 11ல்) விமரிசையாக நடந்தது. இதை ஒட்டி, அதிகாலை, நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கியது. பின், யாக சாலையில் இருந்து, ஆலயத்திற்கு, கடப் புறப்பாடு நடந்தது. காலை, 6:45 மணிக்கு, விமான கலசங்களுக்கு, கும்ப நீர் சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கும், மூலஸ்தான அம்மனுக்கும், மகா கும்பாபிஷேகம்
நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். நேற்று(பிப்., 11ல்) மாலை, அம்மன் திருவீதி உலா நடந்தது.