மாசிமாதப்பிறப்பு: பழநியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :2428 days ago
பழநி: மாசிமாதப்பிறப்பு, கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு பழநி மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது.
மலைக்கோயிலில் பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனந்தவிநாயகர் சன்னதியில் யாகபூஜையுடன், தீபாராதனை நடந்தது. பலத்த காற்று காரணமாக ரோப் கார் அடிக்கடி நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கியது.இதனால் வின்ச் ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கு சென்றனர். அங்கு பொதுதரிசன வழியில் மூலவரை தரிசனம் செய்ய இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தனர். தங்கரத புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.