தங்க கருட வாகனத்தில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி அருள்பாலிப்பு
ADDED :2780 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி தங்க கருட வாகனத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மாசி மக உற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாசி மக உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 19ம் தேதி மதியம் 12:00 மணிக்கு கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.