உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில் உருஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு தர்காவில் ஆலோடி சாப் தர்காவில் உருஸ் என்னும் சந்தனக்கூடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.சிறப்பு விழாவான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் (பிப்., 12ல்) நடந்தது. அதனையொட்டி அன்று இரவுசிறப்பு தொழுகையும், உருஸ் என்னும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழாவும் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !