/
கோயில்கள் செய்திகள் / எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது தானே! பின் ஏன் எம தர்மன் என்று குறிப்பிடுகிறோம்?
எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது தானே! பின் ஏன் எம தர்மன் என்று குறிப்பிடுகிறோம்?
ADDED :5079 days ago
எமனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. யம என்ற சொல்லுக்கு கட்டுப்பாடு என்று பொருள். நாம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும். இதைத் தான் நியமம் என்பார்கள். நியமத்துடன் வாழ்வதையே அறநெறிப் பட்ட வாழ்க்கை என்கிறோம். அறம் என்றால் தர்மம். கட்டுப்பாடும், தர்மமும் இணைந்தவர் தான் எமதர்மன். மனிதன் தர்மத்தை சரியான முறையில் கடைபிடிக்கிறானா என்பதைக் கண்காணிப்பது தான் எமனுடைய வேலை. ஆசிரியர் நன்றாகப் படித்தவனைத் தேர்ச்சி பெறச் செய்கிறார். அதே ஆசிரியர் படிக்காதவனை தோல்வி அடையச் செய்கிறார். அதற்காக அவரை இரக்கமற்றவர் என்று சொல்லலாமா?