/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உண்டியல் வருமானம் ரூ. 30 லட்சம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உண்டியல் வருமானம் ரூ. 30 லட்சம்
ADDED :2791 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான சொக்கநாதர் கோயில், அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று (பிப்., 15ல்) துணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் திறந்து எண்ணப்பட்டன.
கோயில் பணியாளர்கள், வேத பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஐயப்ப சேவா சங்கத்தினர் உண்டியல் பணம்
எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ. 30 லட்சத்து 3 ஆயிரத்து 895. தங்கம் 221 கிராம், வெள்ளி 2 கிலோ 112 கிராம் இருந்தது.