உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கண்டீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி கண்டீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி : காரைக்குடி நகர வேலங்குடி காமாட்சி அம்பாள் சமேத கண்டீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 17ல்)நடந்தது.

கும்பாபிஷேக விழா பிப்., 13 ல் துவங்கியது. பிப்.,14 மாலை 5:30 மணிக்கு கடஸ்தாபனம், முதற்கால யாக பூஜை நடந்தன. பிப்.,15 ல் இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. பிப்., 16 ல் நான்காம், ஐந்தாம் கால பூஜைகள் நடந்தன.நேற்று (பிப்., 17ல்) காலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 6:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தன. காலை 7:45 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தன.ஏற்பாடுகளை நகர வேலங்குடி கோயில் நகரத்தார் செய்தனர்.அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரித் தலைவர் பிச்சப்பா வள்ளியம்மை, தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், செயலாளர் விஸ்வநாதன், முதல்வர் குழ.முத்துராமு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !