சிங்கம்புணரி மங்கல விநாயகருக்கு வெள்ளிக்கவசம்
ADDED :2534 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி தபால்நிலையம் பின்புறம் மங்கல விநாயகர் கோயிலில் வருஷாபிசேகம் மற்றுள் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தும் விழா நடந்தது.
இதையொட்டி பிப். 16 மாலை 5:35 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, காலை 7:15 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. பிப்., 17 ல் இரண்டாம் கால யாக பூஜை, 108 சங்காபிசேகம் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசம் விநாயகருக்கு சாத்தப்பட்டது. இரண்டு நாகர் சிலைகளுக்கும் புதிய வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.