திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :2459 days ago
திருமால்பூர்:மணிகண்டீஸ்வரர் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிப்., 10ம் தேதி, கொடி ஏற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.
இந்த பிரம்மோற்சவத்தின், 7வது நாளில், தேரில், அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ஓம் நமச்சிவாயா என, கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாகச் சென்று, மீண்டும் நிலையம் வந்தடைந்தது.