உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் மாகறலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாகறலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

காஞ்சிபுரம்:மாகறல், மாகறலீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழாவில், தேரோட்டம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த மாகறல் கிராமத்தில், திருபுவனநாயகி உடனுறை மாகறலீஸ்வரர் கோவில் உள்ளது.சைவ குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால், பாடப் பெற்ற தலமான இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மகம் உற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, இந்தாண்டு உற்சவம், பிப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தார்.ஏழாம் நாள் பிரபல உற்சவமான, தேரோட்டம் நடந்தது. இதில், திருபுவனநாயகியுடன், மாகறலீஸ்வரர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். டிராக்டர் மூலம் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. விழாவில், மாகறல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !