காஞ்சிபுரம் ஏகாம்பரர் சிலையை எடுத்து வர உத்தரவு
ADDED :2537 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவத்திற்கு, கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள, புதிய உற்சவ சிலையை எடுத்து வர, ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திர திருக்கல்யாண விழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விழா, அடுத்த மாதம் துவங்க உள்ளது.
விழாவையொட்டி, நேற்று (பிப்., 17ல்) காலை, கோவில் வளாகத்தில், பந்தக்கால் நடப்பட்டது.பிரம்மோற்சவத்திற்கு, பழைய சிலை வைத்து நடத்த வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டதாக, முன் வெளியான தகவல் தவறானது.பிரம்மோற்சவத்திற்கு, கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள புதிய உற்சவர் சிலையை எடுத்து வர, செயல் அலுவலருக்கு, ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.