உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெட்டியார்சத்திரம் அருகே கோயில்களில் கும்பாபிஷேகம்

ரெட்டியார்சத்திரம் அருகே கோயில்களில் கும்பாபிஷேகம்

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளியில், வண்டிகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில், நவக்கிரக ஹோமங்களுடன் இரு கால யாக பூஜைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* கசவனம்பட்டி அருகே கோனூரில், பட்டாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. யாத்ரா தானம், கடம் புறப்பாட்டை தொடர்ந்து, கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. விழானை முன்னிட்டு அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !