உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர் மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர்: மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்துவபுரம் பகுதியில், மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு மயான பூஜை, குண்டம் திருவிழா, முதலாமாண்டு அலகு குத்தும் நிகழ்ச்சி, நேற்று (பிப்., 17ல்) நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமம், 6:00 மணிக்கு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை, 9:00 மணிக்கு, தேர்ப்பேட்டையில் பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தேர் வீதியில் வலம் வந்த பக்தர்கள், மாசாணியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

முதுகில் அலகு குத்தி, அம்மன் வாகனத்தை பக்தர்கள் இழுத்து சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 6:00 மணிக்கு அம்மன் வழிபாடு, இரவு, 11:30 மணிக்கு மயான பூஜை
ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தானம், காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மதியம், 1:30 மணிக்கு அன்னதானம், இரவு, 7:00 மணிக்கு குண்டம்
இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !