விழுப்புரம் அருகேமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2464 days ago
விழுப்புரம்: வழுதரெட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் வழுதரெட்டி சுப்ரமணிய சுவாமி நகரில்
அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நேற்று (பிப்., 17ல்) நடந்தது. விழாவையொட்டி, நேற்று (பிப்., 17ல்) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து, காலை 8.00 மணிக்கு மேல் கும்பாபிஷேகமும், அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து இன்று (18 ம் தேதி) மண்டாலபிஷேகம் துவங்குகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழுப்புரம் நியூ டவுன் புறவழிச்சாலை மேற்கு
குடியிருப்பு பொதுமக்கள் செய்திருந்தனர்.