உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் திரளான பக்தர்கள் உழவார பணி

அண்ணாமலையார் கோவிலில் திரளான பக்தர்கள் உழவார பணி

ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, அண்ணாமலையார் கோவிலில் நடந்த உழவாரப் பணியில் திரளான பக்தர்கள், சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.திருமுல்லைவாயல் பகுதியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி என்ற பக்தி அமைப்பு செயல்பட்டு
வருகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சிவாலயங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு அருகில், காதிர்வேடு கிராமத்தில் உள்ளது அண்ணா மலையார் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய விழாக்களில், திரளான பக்தர்கள் பங்கேற்பர்.அடுத்த மாதம், சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, நேற்று (பிப்., 17ல்), 107வது உழவாரப் பணி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கோவிலில் உள்ள தேவையற்ற செடிகள் ஆகியவற்றை அகற்றி, சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த மாதம், சிவராத்திரி பூஜை அன்று உழவாரப் பணி அமைப்பின் மூலம், அரசு தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியருக்கு, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உட்பட, பல பொருட்கள் சிறப்பு பூஜை செய்து வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !