மாசி மகம் கோலாகலம்: கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :2464 days ago
தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை ஒட்டி, கும்பகோணம் மகாமக குளத்தில், ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
மாசிமக விழாவான இன்று காலை, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் உட்பட, 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில், மகாமக குளக்கரையில் எழுந்தருளினர். தொடர்ந்து, அந்தந்த கோவிலின் அஸ்திர தேவர்களுக்கு, 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மாசி மகத்தையொட்டி, கரையில் ஏராளமானோர், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.