உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி

வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி

புதுச்சேரி : புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், நுாற்றுக்கும் அதிகமான சுவாமிகள் எழுந்தருளின. ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், செஞ்சி அரங்கநாதர், மயிலம்சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீனிவாசப்பெருமாள், தீவனுார் ஆதிநாராயணப் பெருமாள், லாஸ்பேட்டை சுப்ரமணியர், சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில்உள்ள அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சுவாமிகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக வைத்திக்குப்பம் கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டன.அங்கு தீர்த்தவாரிக்கு பிறகு, கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சுவாமிகள் வரிசையாக பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன.

துணை ராணுவ பாதுகாப்பு: கடலில் யாரும் இறங்கி குளித்து மூழ்கி இறந்துவிடாமல் இருக்க, நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் இருந்தனர். குறிப்பாக, முதல்வரின் போராட்ட பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 4 மத்திய பாதுகாப்பு படை கம்பெனியில், இரு கம்பெனி திரும்பிவிட, மீதமிருந்த இரு கம்பெனி பாதுகாப்பு படையினர், மாசி மக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருக்கனுார்:கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் நடந்த தீர்த்தவாரியில் கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கே.ஆர்.பாளையம், சித்தலம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சாமிகள் எழுந்சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கூனிச்சம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முதல் முறையாக அங்காளம்மன்திண்டிவனம், தீவனுார், செஞ்சி என, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுவாமிகள் புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளி வருகின்றன. ஆனால், இந்தஆண்டு முதல் முறையாக மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி அம்மன், மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !