கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக தீர்த்தவாரி
ADDED :2456 days ago
திருக்கோவிலுார் : கீழையூர் வீரட்டானேஸ்வர் கோவில் மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ மாசிமக திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன்‚ உமாகவுரி சுவாமிகளான சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் தென்பெண்ணை ஆற்று தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். மதியம் 1:30 மணிக்கு, தென்பெண்ணையில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம்‚ பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் நீராடல் நடந்தது. தொடர்ந்து பக்தர்களும் ஆற்றில் புனித நீராடினர். தீர்த்தவாரி மண்டபத்தில் சுவாமிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.