செஞ்சி கோதண்டராமர் கோவில் மாசி மக தீர்த்தவாரி விழா
ADDED :2456 days ago
செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை கோதண்டராமர் கோவிலில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில் வளாகத்தில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நடந்தது. இதில் சிங்கவரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், செஞ்சி கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், பெரியகரம் சிவசுப்பிரம ணியர், முத்துமாரியம்மன், திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவில் உற்சவர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து கோவில் உற்சவர்களுக்கும் சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது.இதில் பஜனை கோஷ்டியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.