உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு திருமுறை இசை விழா 8ல் துவக்கம்

பன்னிரு திருமுறை இசை விழா 8ல் துவக்கம்

சென்னை: தி.நகரில், 14ம் ஆண்டு, பன்னிரு திருமுறை இசை விழா, 8ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.சென்னை, தி.நகர், டாக்டர் சந்தானம் சாலையில், ஸ்ரீ கிருஷ்ண கான சபா உள்ளது.இங்கு, வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றம், எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட், ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் ஒய்.சி.பி.ஏ., அமைப்பு இணைந்து, 14ம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழாவை, 8ம் தேதி முதல், 11ம் தேதி வரை நடத்த உள்ளன.நான்கு நாட்கள் நடக்கும் விழாவில், காலை, 8:00 மணியில் இருந்து, இரவு, 9:00 மணி வரை, தேவார இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, ஹரி கதை, திருமுறை நாட்டியம் போன்றவை நடைபெறும்.நல்லி குப்புசாமி, அருண் எக்ஸல்லோ இயக்குனர் சுரஷே், பிள்ளையார்பட்டி அர்ச்சகர் பிச்சை குருக்கள் உள்ளிட்ட பலர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !