நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2794 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அவலுார்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவ நாமாவளி பாடல்கள் பாடி மகாதீபாராதனை நடந்தது.இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.