வெள்ளியங்கிரி புறப்படும் சிவ பக்தர்கள்
ADDED :2457 days ago
காஞ்சிபுரம் : மஹா சிவராத்திரிக்கு, காஞ்சியிலிருந்து, வெள்ளியங்கிரி மலைக்கு, சிவ பக்தர்கள் செல்ல தயாராகி வருகின்றனர்.நாடு முழுவதும், மார்ச் 4ல், மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினம், சிவாலயங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். காஞ்சி புரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிவாலயங்களில் அன்றைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் படவுள்ளன.
இது ஒருபுறமிருக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவனை வழிபட, ஏராளமானோர் புறப்படஉள்ளனர்.குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் இருந்து, பல குழுக்கள் புறப்படவுள்ளனர். இப்பயணத்தில், பெரும்பாலும் இளைஞர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.