உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கண்ணனேந்தல் சுந்தரலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை கண்ணனேந்தல் சுந்தரலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. இரண்டாம் காலயாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சார்யார்கள் புனிதநீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜீவானந்தம், விழா கமிட்டி தலைவர் முருகன், நிர்வாகிகள் சக்தி குமார், ஜெயமணி, கண்ணதாசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !