ஏரிகாத்த ராமர் கோவில் தெப்போற்சவம் விமரிசை
ADDED :2730 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம், ஏரிகாத்த ராமர் கோவில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மதுராந்தகம், ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் மிகப் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்போற்சவத் திருவிழா நடந்தேறியது. முன்னதாக, காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் சுவாமிகள் வீதியுலாவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. மதுராந்தகம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தெப்போற்சவத்தில் பங்கேற்று, ராமபிரானை தரிசித்தனர்.