பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பறவைக் காவடி
ADDED :2620 days ago
பழநி, பழநி முருகன் கோயிலுக்கு நுாற்றுக்கணக்கான வால்பாறை பக்தர்கள் அலகு குத்தி பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் வெளியூர் பக்தர்கள் குவிகின்றனர். நேற்று கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் பழநி வந்தனர். சண்முகநதியில் நீராடி அங்கு 10அடி முதல் 15அடி நீளமுள்ள வேல் அலகு குத்தினர். மேலும் பத்து பக்தர்கள் வாள் கத்தியை உடலில் குத்தி கிரேன் வாகனத்தில் பறவைபோல காவடி எடுத்து வந்தனர். கிழக்குரத வீதி பெரிய நாயகியம்மன் கோயில் அடிவாரம் திருஆவினன்குடி கோயில்களில் பூஜை செய்து கிரிவீதியை வலம் வந்தனர்.