உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கடந்த 5ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று (13ம் தேதி) முக்கிய நிகழ்வாக, தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் திருத்தேர் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இன்று 14ம் தேதி ஸ்படிக பல்லக்கில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (15ம் தேதி) காலை 5:00 மணியளவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !