இளையான்குடி அரண்மனைக்கரை கருமேனிஅம்மன் கோயில், பூமிதி திருவிழா
ADDED :2462 days ago
இளையான்குடி : இளையான்குடி அரண்மனைக்கரை கருமேனிஅம்மன் கோயில், மாசி மகா உற்ஸவத்தை முன்னிட்டு, பூமிதி திருவிழா நடந்தது. கடந்த ஞாயிறன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற பூமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள், அம்மனை வேண்டி பூமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.