முனீஸ்வரன் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED :2455 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. அதனையொட்டி, முனீஸ்வரனுக்கு விசேஷ ஹோமம், திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.