உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: சர்க்கரை சாதம்

பிரசாதம் இது பிரமாதம்: சர்க்கரை சாதம்

என்ன தேவை

பச்சரிசி    –    200 கிராம்
வெல்லத்தூள்     –    225 கிராம்
பாசிப்பருப்பு    –    50 கிராம்
பால்     –    100 மி.லி.,
தேங்காய்த் துருவல் –     1/2 மூடி
முந்திரிப்பருப்பு      –    6
ஏலக்காய்             –    4
நெய்             –    50 கிராம்

எப்படி செய்வது

பாசிப் பருப்பை சற்று சிவக்க வறுக்கவும். அரிசியைக் களைந்து வைக்கவும். வெல்லத்தூளை ஒரு கை தண்ணீர் விட்டுக் கரைய வைத்து வடிகட்டி வைக்கவும். மூன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அரிசி, பருப்பை அதில் போட்டு நன்கு குழையும் வரை வேக விடவும். அரிசி வெந்ததும் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி கெட்டியான பின் முந்திரியை வறுத்து அதில் போடவும். அதனுடன் தேங்காய்த் துருவல் மற்றும் நெய்யைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவீட்டான சர்க்கரை சாதம் ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !