கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை
ADDED :2450 days ago
கள்ளக்குறிச்சி: மாணவ, மாணவிகள் கல்வி நலன் கருதி கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதி உள்ளது. இங்கு, மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படவும், தேர்வில் வெற்றி பெறவும் சிறப்பு பிரார்த்தனை, சகஸ்ரநாம அர்ச்சனை நேற்று முன்தினம் இரவு நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் இருந்த லட்சுமி ஹயக்கிரீவர் பாதத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை தேசிக பட்டர் செய்திருந்தார். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.