உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் கோயிலில் கொடியேற்றம்

திருப்புவனம் கோயிலில் கொடியேற்றம்

திருப்புவனம் : திருப்புவனம் புதூர் பூமாரியம்மன் ரேணுகாதேவி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நாளை (பிப்., 28ல்) இரவு 9:00 மணிக்கு நடைபெறகிறது.

திருப்புவனத்தின் காவல் தெய்வமான பூமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுவது வழக்கம். மாரியம்மன் கோயில் விழாவில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் எந்த ஊரில் இருந்தாலும் விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா நாளை (பிப்., 28ல்) வியாழக்கிழமை இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத் துடன் தொடங்குகிறது. தினசரி பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு உள்ளிட்டவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பொங்கல் உற்ஸவம் மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் நகர் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !