உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

வால்பாறை காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

வால்பாறை: வால்பாறை கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தேய்பிறை அஷ்டமி, பைரவரை தரிசிப்பதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் காலபைரவருக்கு, அஷ்டமி தினமான நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !