உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா

மேலூர் சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா

மேலூர் : மேலூர் சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று (பிப்., 27ல்) பச்சை மண்ணால் செய்யப்பட்ட அம்மன், தேரில் கோயிலுக்கு எழுந்தருளினார். இன்று(பிப்.,28)நேர்த்திக்கடன் புரவிகள் அம்மச்சியம்மன் கோயிலுக்கும், கோயிலில் உள்ள அம்மன் பூஞ்சோலைக்கும் கொண்டு செல்லப்படும். பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கிடா வெட்டி பொங்கல் வைப்பர். மார்ச் 1ல் மஞ்சுவிரட்டு மற்றும் அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் அலங்கம்பட்டி, பட்டூர் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !