இடைப்பாடி கோவில் திருவிழா: தீ மிதித்த பக்தர்கள்
ADDED :2448 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும், பல்வேறு பூஜை, சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று, தீ மிதி விழா நடந்தது. அதில், வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த மக்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர், பல்வேறு வகை அலகுகள் குத்தி, தீ மிதித்து பக்தி பரவசமடைந்தனர்.
* சங்ககிரி, தேவூர் அருகே, சென்றாயனூர், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி, அக்னி சட்டி ஏந்தி, பூங்கரகம் எடுத்து, கல்வடங்கத்திலிருந்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளானோர் வழிபட்டனர்.